மதங்களுக்கிடையே முரண்பட்டால் இனத்தை சார்ந்தவர்களிடம் நியாயம் கேட்க முடியாது!

மதங்களுக்கிடையே முரண்பட்டால் இனத்தை சார்ந்தவர்களிடம் நியாயம் கேட்க முடியாது!

தமிழர்கள் மதங்களுக்கிடையே முரண்பட்டால், இனத்தை சார்ந்தவர்களிடம் நியாயம் கேட்க முடியாதென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய விவகார அமைச்சின் கீழ் நடமுறைப்படுத்தப்படும் தெய்வீக சேவைத் திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உள்வாங்கப்பட்ட சுமார் 245 ஆலயங்களை புணர்நிர்மாணம் செய்வதற்கான நிதி வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்பொதே அமைச்சர் மனோ மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“முல்லைத்தீவு நீராவியடி மற்றும் கன்னியா ஆகிய பகுதிகளில் தற்போது நடைபெறும் பிரச்சினை இந்து மக்களுக்கும் பௌத்த மக்களுக்கும் உள்ள பிரச்சினை ஆகும்.

திருக்கேதிஸ்வரத்தில் உள்ள பிரச்சினை இந்து தமிழர்களுக்கும் கத்தோலிக்க தமிழர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சினையாகும்.

இங்கு தமிழ் இனத்தை இந்து என்றும் கத்தோலிக்கவர் என்றும் இரண்டாக பிரிக்கின்றார்கள். இதனாலேயே பிரச்சினைகள் எழுகின்றன.

தமிழினத்தை மத அடிப்படையில் கூறுபோடுவதை தடுத்து நிறுத்தி இரு தரப்பினர்களிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதவர்கள் நீராவியடியிலும் கன்னியாவில் நடக்கும் விடயங்கள் குறித்து பேச தகுதி அற்றவர்கள்” என தெரிவித்தார்.

Facebook Comments