மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்!

மக்கள் அனைவரும் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக வேண்டும்!

தேசமாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்களுக்கான அடித்தளமிடக்கூடிய ஒரு வருடமாக இப்புத்தாண்டு மலரட்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் பத்தாண்டுகள் கடந்து செல்கின்ற நிலையில் சமுதாய, கலாசார, அரசியல் ரீதியாக ஒவ்வொருவருடைய உரிமைகளும் பொறுப்புக்களும் கிடைக்கப்பெற வேண்டிய ஒரு வருடமாக இவ்வருடம் அமைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் ஏனைய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் மலரும் புத்தாண்டு சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய பிரார்த்திக்கிறேன் என்றும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


 

Facebook Comments