பெண்களுக்கு கடன் திட்டமா? தற்கொலைக்கு திட்டமா?

பெண்களுக்கு கடன் திட்டமா? தற்கொலைக்கு திட்டமா? வவுனியாவில் பேரணி

நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கடை வழியினூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.

பின்னர் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் ஆளுநருக்கும், அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.

இதன் போது வட்டிக்கு வட்டி இரத்து செய்து வாழவிடுங்கள், ஏழைகளின் உணர்வை புரிந்து கொள், பெண்களுக்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா, நாங்களும் மனிதர்களே மரியாதையுடன் அனுகுங்கள், நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு பேன்ற பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Facebook Comments