பூநகரிப்பிரதேசத்தில் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிப்பு

பூநகரிப்பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் நிலவும் வறட்சி காரணமாக 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் குடிநீர்த்ட்டுப்பாடு நிலவி வருகின்றது.

அதேவேளை பல வாழ்வாதாரத்தொழில்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போது அதிக வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதியாக பூநகரிப்பிரதேசம் காணப்படுகின்றது.

குறிப்பாக, இந்தப்பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீர்த்தடுப்பாடு நிலவுவதுடன். அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீர் நிலைகள் வற்றிக்காணப்படுவதனால் கால்நடைகள் நீர் தேடி அலைகின்ற நிலமையும் காணப்படுகின்றது.

பூநகரிப்பிரதேசத்தின் வறட்சி நிலமைகள் தொடர்பில் பூநகரிப்பிரதேச செயலாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, பூநகரிப்பிரதேசத்தில் வறட்சியினால் 491 விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது 2087 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் நாட்களில் இந்தத்தொகை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்வாறு பூநகரிப்பிரதேசத்தில் இதுவரை 3426 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments