புத்தாண்டை ஆடம்பரமற்ற முறையில் வரவேற்கவுள்ள கிளிநொச்சி மக்கள்.

புத்தாண்டை ஆடம்பரமற்ற முறையில் வரவேற்கவுள்ள கிளிநொச்சி மக்கள்.

தமிழ் சிங்களப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் தயாராகி வருகின்றனர்.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் புத்தாடை கொள்வனவில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கடந்த காலங்களைப் போன்று இவ்வருடம் மக்கள் மத்தியில் கொண்டாட்டங்கள் மீதான ஆர்வம் குறைவாகவே காணப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், தற்போது காணப்படும் வறட்சி உள்ளிட்டவற்றுக்கு முகங்கொடுத்துள்ள கிளிநொச்சி மக்கள் அமைதியான முறையிலும், ஆடம்பரமற்ற முறையிலும் புத்தாண்டைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, புத்தாண்டு வியாபாரங்கள் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன.

Facebook Comments