பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்!

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்!

பிரதமராக பதவியேற்று தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவத்துள்ளார்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பதில் அளித்தனர்.

பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்ற அதே வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது ராகுல் காந்தி முன் வைத்த விஷயங்கள் பின்வருமாறு,..

“பிரதமர் நரேந்திர மோடி, முதன்முறையாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். இது ஒரு நல்ல துவக்கம். இது நல்ல விஷயம்.

செய்தியாளர்களாகிய உங்களுக்கு நான் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நீங்கள், என்னிடம் எப்போதும் கடினமான கேள்விகளை கேட்கிறீர்கள். அதேப்போல் பிரதமர் மோடியிடம் மிகவும் கடினமான கேள்விகளை கேளுங்கள். குறிப்பாக பாலகோட் தாக்குதல் குறித்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.

தேர்தல் ஆணையம், பாஜக-வுக்கு ஆதரவாக நடந்து கொள்வது வெளிப்படையாக தெரிகிறது. இந்த மொத்த தேர்தல் அட்டவணையும் பாஜக-வுக்கு சாதகமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டு மக்கள் தேர்தல் ஆணையம், எப்படி ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டது என்பதைப் பார்த்தார்கள்.

நான் பிரதமர் வேட்பாளரா என்று பலர் கேட்கின்றனர். அது குறித்து நான் தற்போதைக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை., காரணம், இன்னும் தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. மக்கள் தீர்ப்பளித்த பின்னர் அது தொடர்பாக நான் பதில் அளிக்கின்றேன்.

பிரதமர் மோடியிடம் நான் பல முறை விவாதத்துக்கு வாருங்கள் என்று சவால் விட்டுள்ளேன். தற்போது அழைக்கின்றேன்., ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நான் அவரை விவாதத்துக்கு வாருங்கள் என்று கூறியுள்ளேன். ஆனால், இதுவரை அதற்கு பின்னூட்டம் அளிக்கவில்லை.

எனவே, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் மோடியிடம் ஒன்றை மட்டுமே கேட்கிறேன். ரபேல் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களுக்காகவது தெரிவியுங்கள்.” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்த தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி குறிப்பிடுகையில்., “செய்தியாளர் சந்திப்பில் வெற்றிகரமாக மௌனம் காத்த மோடிக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த முறையாவது தங்களை பதில் அளிக்க அமித் ஷா அனுமதிப்பார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments