பிரதமரின் அழைப்பினை நிராகரித்தார் எதிர்கட்சித்தலைவர்!

இஸ்ரேலில் கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை எதிர்க்கட்சி தலைவர் நிராகரித்துள்ளார்.இஸ்ரேலில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.97 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் லிகுட் கட்சி 31 இடங்களிலும், பிரதான எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சி 33 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதன்காரணமாக மீண்டுமொரு நாடாளுமன்ற தேர்தலை நாடு சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.இதனை தவிர்க்கப்பதற்காக எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒய்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து புதிய அரசாங்கம் ஒன்றினை அமைக்க பிரதமர் தீர்மானித்திருந்தார்.இதற்கமைய கூட்டணி அமைப்பதற்காக புளூ அன்ட் ஒய்ட் கட்சி தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான பென்னி கான்ட்சுக்கு, நெத்தன்யாஹூ அழைப்பு விடுத்தார்.எனினும், குறித்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பென்னி கான்ட்ஸ் ஏற்க மறுத்துவிட்டார்.
தனது தலைமையிலேயே கூட்டணி அரசாங்கத்தினை அமைக்க தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments