பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷா தெரிவு!

பா.ஜ.க.வின் தேசிய தலைவராக அமித்ஷா தெரிவு!

பா.ஜ.கவின் தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர்ந்தும் செயற்படுவார் என மாநில தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களில் வெற்றிபெற அமித்ஷாவே காரணம் என்பதால் அவரே தலைவராக தொடரவேண்டும் என்று அனைத்து மாநில தலைவர்களும் கோரியிருந்த நிலையில், அவரே தலைவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால் அமித்ஷா தலைவராக செயற்படுவார் என்று கட்சி நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நேற்று பா.ஜ.கவின் மாநில தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் பா.ஜ.கவின் தேசிய தலைவரை தெரிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், கட்சிக்கு புதிய தலைவர்களை சேர்ப்பது குறித்த ஆலோசனைகளும் இடம்பெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments