பலத்த பாதுகாப்பிற்க்கு மத்தியில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பமாகின.

பலத்த பாதுகாப்பிற்க்கு மத்தியில் இன்று பாடசாலைகளில் கனிஷ்ட வகுப்புக்களும் ஆரம்பமாகின.

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து 2ம் தவணைக்காக பாடசாலைகளை திறப்பதில் தாமதங்கள் ஏற்பட்டன.

கடந்தவாரம் தரம் 6 முதல் உயர்தரம் வரை 2ம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்டது.

இன்று கனிஸ்ட பிரிவுகள் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்பமாகின. பாடசாலைகளில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

விசேட அதிரடிப்படையினரும், படையினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை பொலிசார், சிவில் பாதுகாப்பு பிரிவினர், பெற்றோர் பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டனர். மாணவர்களின் பாடசாலை பைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தது.

13ம் திகதி தாக்குதல்கள் இடம்பெறலாம் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றய தினம் பொலிஸ் பேச்சாளர் அவ்வாறான அச்சுறுத்தல் ஏதும் விடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

எனினும் பாடசாலைகளில் இன்றைய தினமும் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனினும் அனைத்து பாடவேளைகளும் இடம்பெறும் என கல்வி சமூகம் தெரிவிக்கின்றது.

Facebook Comments