பனிப்புயலில் சிக்கிய விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி!

பனிப்புயலில் சிக்கிய விமானம்: பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி!

சில நேரங்களில் மிகக் கடுமையான நெருக்கடி நேரங்களில் நாம் அனுபவிக்கும் சிறிய அன்பின் அடையாளம் அதீத நிவாரணம் தரும்.

இதை நிரூபிக்கும் வகையில் பனிப்புயலில் சிக்கிய விமானத்திலிருந்த பயணிகளுக்கு சுடச்சுட பீட்சா வரவழைத்துக் கொடுத்து நெகிழச் செய்திருக்கிறார் விமானி ஒருவர்.

கனடா நாட்டின் ஏர் கனடா 608 விமானம் டொரன்டோ நகரிலிருந்து நோவா ஸ்காட்டியாவுக்கு புறப்பட்டது. ஆனால் நோவா ஸ்காட்டியாவில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் அங்கிருந்து நியூ பிரஸ்விக் பகுதியில் உள்ள ஃப்ரெடெரிக்டன் விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது.

விமானம் தரையிறக்கப்பட்டாலும் கூட, மோசமான வானிலை காரணமாக பயணிகள் விமானத்தினுள்ளேயே இருக்க நேர்ந்தது. பல மணி நேரம் விமானத்துக்குள் இருந்ததால் பயணிகள் ஒருகட்டத்தில் சோர்வடைந்தனர்.

அப்போது விமானத்தின் லிமானி பயணிகளை உற்சாகப்படுத்த அவர்களுக்காக பீட்சா ஓடர் செய்து அதை சுடச்சுட வரவழைத்து கொடுத்திருக்கிறார்.

விமான நிலையத்திற்கு அருகிலிருந்த மிங்க்லர்ஸ் உணவகத்திற்கு அழைத்து லிமானி சீஸ், பேப்பரோனி சேர்க்கப்பட்ட 23 பீட்சாக்களை விமானத்திற்கு கொண்டுவருமாறு கூறியிருக்கிறார். முதலில் வியந்துபோன ஹொட்டல் ஊழியர்கள் நிலவரத்தைப் புரிந்து கொண்டு ஓர்டரை எடுத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால், 23 பீட்சாக்களை செய்ய சுமார் ஒன்றரை மணி நேரம் தேவைப்படும் எனக் கூறியுள்ளனர் விமானியும் சரி என்று கூற பீட்சாக்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன.

இது குறித்து ஹொட்டல் ஊழியர்கள் கருத்து தெரிவிக்ககையில், “எத்தனையோ ஆண்டுகளாக எங்கெங்கோ பீட்சா விநியோகம் செய்திருக்கிறோம். ஆனால், ஒரு விமானத்துக்கு சென்று பீட்சா ஓர்டர் செய்தது இதுதான் முதன்முறை” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இருக்கைகளில் இறுக்கத்துடன் அமர்ந்திருந்த பயணிகள் திடீரென விமானி பீட்சாக்கள் வழங்கப்பட சோர்வு நீங்கி மகிழ்ச்சியும் புத்துணர்வும் பெற்றிருக்கின்றனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்த ஃபிலோமினா ஹியூக்ஸ் என்ற பெண் சி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அன்றைய தினம் மிகுந்த அழுத்ததை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் விமானி தனது செய்கையால் எல்லாவற்றையும் லகுவாக்கிவிட்டார்” என்றார்.

Facebook Comments