பதவி விலகப்போவதில்லை! 

பதவி விலகப்போவதில்லை!

எனது ஒப்பந்தக்காலம் முடிவடையும் வரை பதவி விலகப்போவதில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவியில் உடனடி மாற்றங்கள் நிகழக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

எனக்கு இன்னமும் 16 மாதங்கள் உள்ளன என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனது ஒப்பந்தக்காலம் முடிவடையும் வரை நான் பதவியிலிருக்க எண்ணியுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லாதமைக்கான பொறுப்பை அணியின் முகாமை குழு முழுவதும் ஏற்கவேண்டும் என ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

Facebook Comments