பங்களாதேஷ் தடுமாற்றம்: சிம்பாப்வே சிறப்பாட்டம்!

பங்களாதேஷ் தடுமாற்றம்: சிம்பாப்வே சிறப்பாட்டம்!

பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்களை குவித்தது.

ஆட்ட நேர முடிவில் பீட்டர் மூர் 37 ஓட்டங்களுடனும், ரெஜிஸ் சாகாப்வா 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

சில்ஹெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய சிம்பாப்வே அணி, முதல் நாளான இன்று, 91 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்ளை குவித்தது.

முதல்நாள் ஆட்ட நேர முடிவின் படி, சிம்பாப்வே அணியின் அதிகபட்ச ஓட்டமாக சீன் வில்லியம்ஸ் 88 ஓட்டங்களையும், ஹெமில்டன் மசகட்சா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தஜ்சுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Facebook Comments