நுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்! 

நுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்!  களமிறங்கிய அதிரடி படை!

மலையகத்தின் நுவரெலியா பகுதியில் பலத்த தேடுதல் நடவடிக்கையை சிறப்பு அதிரடி படையினர் ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அச்சம் காரணமாக பலர் மலையக பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து நேற்று இரவு முதல் நுவரெலியா பகுதியில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திடமான பலர் கைது செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக நுவரெலியா காணப்படுகிறது.

இதன் காரணமாக அந்த பகுதிகளிலுள்ள ஹோட்டல்களை அண்மித்த பகுதிகளில் சிறப்பு அதிரடி படை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை நுவரெலியா வைத்தியசாலையில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Facebook Comments