நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகளுக்கு தடை!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டடப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

அத்தோடு இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு (புதன்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தேவையேற்படின் நீதிமன்றின் அனுமதியுடன் மேலதிக கட்டடங்களோ, அபிவிருத்திகளோ மேற்கொள்ள முடியும் என்கின் உத்தரவை தான் நீதிமன்றில் கோரி பெற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Facebook Comments