நீதியான முறையில் மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை!

நீதியான முறையில் மரண தண்டனை வழங்குவதில் தவறில்லை!

பொய் சாட்சிகளை வழங்கி, சட்டத்துக்கு புறம்பாக, வஞ்சகமான முறையில் மரண தண்டனை வழங்குவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஆயினும் நீதியான முறையில் போதைபொருள் வியபாராத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் தவறு இல்லை என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படுபவர்களுக்கும் நாம் எதிர்க்கொண்டுள்ள நவீன ரக பயங்கரவாதத்திற்கும் எவ்வாறு பதலளிப்பது என்பதனை நாடென்ற ரீதியில் தீர்மானிப்பது அவசியமானதாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கெஸ்பேவ – கஹாபொல ஸ்ரீ சத்தர்மராம விகாரையில் புதிய அறநெறி பாடசாலை கட்டிடத்தொகுதியை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Facebook Comments