நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம்!

நயன்தாரா திருமணத்திற்கு சம்மதம்!

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி கதாநாயகியாக வலம் வரம் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். எனினும் நயன்தாரா சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் இருவரது திருமணம் குறித்து பேசப்பட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

Facebook Comments