நடுவானில் தொலைபேசியால் வானூர்த்திக்குள் தீ!

நடுவானில் தொலைபேசியால் வானூர்த்திக்குள் தீ! அவசரமாக தரையிறக்கம்.

அமெரிக்காவின் நியூயார்க் இல் இருந்து லண்டனுக்கு சென்று கொண்டிருந்த
விர்ஜின் அட்லான்டிக் (Virgin Atlantic) நிறுவனத்தைச் சேர்ந்த வானூர்தி ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணியின் இருக்கையில் தீப்பிடித்ததைத் தொடர்ந்து போஸ்டன் (Boston)வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

வானூர்தியில் ஏற்பட்டத் தீயை சிப்பந்திகள் அணைத்து சோதனை செய்தபோது போது இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் கைத்தொலைபேசிக்கான மின்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதுதான் தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இந்த சம்பவத்தின் போது 217 பயணிகள் வானூர்தியில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Facebook Comments