திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம்

திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம்

நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டி திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளை புறக்கணித்து இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

Facebook Comments