தாயையும் மகளையும் கடத்திச்சென்ற பிக்கு!

தாயையும் மகளையும் கடத்திச்சென்ற பிக்கு!

கம்பளை கெந்த கொல்ல கிராமத்தில் தாயுடன் வசித்து வந்த இருபது வயது யுவதியை நள்ளிரவில் சகாக்களுடன் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த 26 வயதுடைய முன்னாள் பிக்கு உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபர் கெந்தகொல்ல கிராமத்தில் உள்ள பௌத்த விஹாரையில் முன்னர் பிக்குவாக இருந்த சந்தர்பத்தில் கடத்தப்பட்ட யுவதியுடன் ஏற்பட்ட காதல் தொடர்பையடுத்து துறவறத்தை கைவிட்டு குடும்ப வாழ்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் குறித்த யுவதி திடீரென சந்தேக நபருடனான காதல் தொடர்பை நிறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது’

இதையடுத்தே சந்தேக நபர் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த தனது சகாக்களை அழைத்துக்கொண்டு கம்பளை அட்டபாகை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான வேன் ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி இரவு 12 மணியளவில் யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன்கள் இரண்டையும் கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக குறுந்துவத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Facebook Comments