‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது!

‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் வெளியானது!

விளையாட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படம் 2019 தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருக்கின்றது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிப்பதுடன், அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதன் படப்பிடிப்புக்கள் சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகின்றன.

நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments