தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

தர்மபுரத்தில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2ம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

28 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Facebook Comments