தமிழ், முஸ்லிம் மக்களின் கருத்திற்கொண்டே கோட்டாவிற்கு ஆதரவு – MP அங்கஜன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முடிவை, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும் முடிவினை மேற்கொண்டுள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments