தமிழக அரசும் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது!

தமிழக அரசும் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது!

மத்திய அரசை போலவே தமிழக அரசும், ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“தமிழக மக்களின் வரிப் பணத்தில் புதிதாக கொள்வனவு செய்துள்ள பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு ஒருபுறம் என்றால் நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று ஹிந்தியை திணிக்கும் அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு முயற்சிக்கு, தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments