தபால் வாக்களிப்பிற்கு 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்பு இம் மாதம் 31 ஆம் திகதியும் அடுத்த மாதம் 1 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)  

Facebook Comments