டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி!

டோனியின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி!

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களில் டோனியின் சாதனையை விராட் கோலி (சனிக்கிழமை) முறியடித்தார்.

அந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்களின் வரிசையில் 4 ஆவது இடத்தில் இருந்த டோனியை பின்தள்ளி கோஹ்லி நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.

டோனி 273 இன்னிங்ஸில் விளையாடி 10,143 ஓட்டங்கள் எடுத்துள்ளார். கோஹ்லி 205 இன்னிங்ஸில் விளையாடி 10,076 ஓட்டங்களை எடுத்திருந்தார். டோனியை முந்துவதற்கு அவருக்கு 66 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டி இன்று நடைபெற்றது.

அதில் துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி 66 ஓட்டங்களைப் பெற்றபோது நிலையில் டோனியின் சாதனையை முறியடித்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில், சச்சின் டெண்டுல்கர் 18,426 ஓட்டங்களுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ஓட்டங்களுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளதோடு ட்ராவிட் 10,405 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்தில் உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments