ஜேர்மனிக்கு ட்ரம்ப் சவாலாகக் காணப்படுகிறார்!

ஜேர்மனிக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாரிய சவாலாகக் காணப்படுவதாக கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

survey எனும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலேயே, இது தொடர்பாக தெரியவந்துள்ள. இது தொடர்பான தகவலை அந்நிறுவனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

அக்கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வெளிவிவகாரக் கொள்கையில் அமெரிக்காவும் அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜேர்மனிக்கு பாரிய சவாலாகக் காணப்படுவதாக ஜேர்மனியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 19 சதவீதமானோர் இது தொடர்பாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சுமார் ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்போது, 56 சதவீதமானோர் அமெரிக்காவுடனான ஜேர்மனியின் உறவை மோசமாகக் கருதுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments