ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு?

சென்னை ஐகோர்ட்டில், சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ´மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும்´ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதேபோல, வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட 4 சொத்துகளை முடக்கிவைத்துள்ளதாக வருமான வரித்துறையும் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையடுத்து நீதிபதிகள், ´ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிக்காட்டி மதிப்பு எவ்வுளவு? என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரித்துறை தாக்கல் செய்யவேண்டும்.´ என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Facebook Comments