ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படமாட்டாது !

அரசாங்கத்தின், நிர்வாகத்தின், அமைச்சரவையின் மற்றும் முப்படையின் தலைவராக எதிர்காலத்திலும் ஜனாதிபதி செயற்படுவார் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறும் நபருக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் 113 க்கும் அதிக பெரும்பான்மையை கொண்ட அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுராதபுர வர்த்தகர்களுக்கிடையிலான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்தார்.

நாம் மீண்டும் நாட்டில் ஒரு தீர்க்கமான நிகழ்வை எதிர்கொண்டுள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதி பதவி பயனற்றது என்று சிலர் கூறுகிறார்கள்.

கடந்த 1977 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த கொபல்லாவ அவர்களின் ஜனாதிபதி பதவி போன்றது என்று சிலர் கூறுகின்றனர்.

அதன் காரணமாக பிரதமர் பதவியே அதிக அதிகாரங்களை கொண்டது என்ற கருத்து கூறப்படுகின்றது.

Facebook Comments