சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் அதிருப்தி!

சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் அதிருப்தி!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் தலைமையின் மீதான நம்பிக்கை ஊழியர்களிடையே குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இந்த சதவீதம் குறைந்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வருடமும் கூகுள் தன் ஊழியர்களிடம் நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்துவது வழக்கம்.

‘Alphabet Inc’ என்று அழைக்கப்படும் இந்த கருத்துக்கணிப்பு இந்த வருடமும் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கூகுள் நிறுவனத்தை பற்றிய சுந்தர் பிச்சையின் கனவு ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதா என்ற கேள்விக்கு, 78 சதவீதமானோர் ஆம் என்று பதிலளித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் குறைவாகும்.

தொடர்ந்தும், சுந்தர் பிச்சையும் அவரது நிர்வாகத்தினரும் கூகிளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வார்களா என்ற கேள்விக்கு 74 பேர் ஆம் என்றும் பதிலளித்துள்ளனர்.

இதுவும் கடந்த ஆண்டைவிட 18 சதவீதம் குறைவாகும். கடந்த வருடம் கூகுள் நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கடும் மனவுளைச்சலே முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

ஒப்பந்த ஊழியர்கள் தங்களுக்கு எந்தவித சலுகையும் அளிக்கப்படவில்லை என்று நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முதல், கடுமையான விதிமுறைகள் காரணமாக பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேறியது வரை கடந்த ஆண்டு கூகுளுக்கு கடினமான ஆண்டாகவே அமைந்தது.

இந்நிலையில், இந்த கணக்கெடுப்பு முடிவுகளும் அதன் விளைவாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை பதவியேற்றார்.

கூகுளின் ‘Googlegeist’ நிறுவனம் உலகின் மிக திறமைசாலி ஊழியர்களை மட்டும் தேர்வுசெய்து பணிக்கு அமர்த்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments