சுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் அவர்களுடன் இருந்து போராடுவேன்!

சுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் அவர்களுடன் இருந்து போராடுவேன்
பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா

பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் வடமாகாண அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் தொடர் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ள நிலையில், கரைச்சி பிரதேச சபை முன்பாக குறித்த போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் வடமாகாணத்தில் கொண்டுவரப்பட்டள்ள சுற்றுநிருபத்தில் மற்றத்தை ஏற்படுத்த கோரியே குறித்த போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இது ஓர் சாதாரண போராட்டம் அல்ல எமது மாவட்டத்தை சுத்தமாக அழகாக வைத்திருக்க பாடுபடும் ஊழியர்களின் உரிமைப் போராட்டம் ஆகவே இவர்களது வலியை உணர்ந்தவன் இவர்களுடன் பழகியவன் என்ற வகையில் இவர்களுக்கு நல்ல முடிவு வந்து இவர்கள் போராட்டத்தை கைவிடும் வரை நானும் இவர்களுடன் சேர்ந்து போராட்ட உள்ளேன்.

சுற்று நிருபத்தை பார்வையிட்டேன் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆறு பாடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தென்னிலங்கை பகுதியில் உள்ள சபை ஒன்றிற்கு எட்டாம் ஆண்டு சித்தி மற்றும் வேலை செய்வதற்கான தேக ஆரோக்கியம் கேட்கப்பட்டுள்ளது.

இரண்டும் வெவ்வேறு நாட்டிலா உள்ளது பாதிக்கப்பட்ட மக்களையே மீண்டும் மீண்டும் பாதிப்பிற்கு உட்படுத்தாது உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பதில் வழங்க வேண்டும் தெற்குக்கு ஒரு நீதி வடக்குக்கு ஒரு நீதியா அதுமட்டுமல்லாது பல காலமாக பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் அதுவரை அவர்களுடன் நானும் போராடுவேன் என தெரிவித்தார்.

Facebook Comments