சீனாவிலிருந்து கார்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை?

சீனாவிலிருந்து கார்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை?

சீனாவிலிருந்து கார்கள் மற்றும் குறிப்பிட்ட சில வாகனங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 25 சதவீதம் வரை கூடுதல் வரியை அமெரிக்கா விதித்ததை அடுத்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாவி நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா, குறித்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இணைத்துக்கொண்டது.

இந்தநிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில கார்களைத் தடை செய்யவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தப் போர் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Facebook Comments