சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.

இத்திரைப்படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் கசிந்த நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்புடன் கூடிய first look ஒளிப்படத்தினை நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹொப் தமிழா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும், இத்திரைப்படத்தின் பாடல்கள் இம்மாதம் இறுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Facebook Comments