சட்டவிரோத செயல்பாட்டாளர்கள் சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் கிராம சேவகர்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்தில் பல சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடுவார்களின் அச்சுறுத்தலினால் கிராம சேவகர் தனது சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைமை காணப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் ஏற்றுபவர்கள் நேற்று இரவு கிராம சேவகரின் வீடிற்குள் புகுந்து வாகனங்கள் மற்றும் வீடுகளை சேதமாகி உள்ளாக்கப்பட்டு உள்ளது இதன்போது 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்

Facebook Comments