கோத்தாபயவுக்குத்தான் ஆதரவு மொட்டில்  இணையவில்லை MP தயாசிறி ஜயசேகர!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றதே தவிர மொட்டுடன் இணையவில்லை எனத் சுதந்திரக்  கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரவித்தார்.  சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர கட்சி ஏன் வேட்பாளரை களமிறக்கவில்லை என்று ஆதரவாளர்கள் பலரும் எம்மிடம் கேட்கின்றனர். அவ்வாறு வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

அதனை தடுப்பதற்காகவே நாம் களமிறங்காது கோத்தாபயவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்தோம்.அதே நேரத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் கட்சியைக் காட்டிக் கொடுப்பதற்கும் தயாராக இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி , பிரதேச சபை உறுப்பினர்கள் , மாநகரசபை உறுப்பினர்கள் என்று கீழ் மட்டத்திலிருந்து யாரையும் பாதிக்காத வகையில் கட்சி ரீதியாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஓரிரு தினங்களில் அந்த கட்சியுடனான ஒப்பந்தம் கைசாத்திடப்படும். கோத்தாபய ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கும் அதே வேளை, அந்த மாநாட்டிலேயே அவருடனான ஒப்பந்தமும் கைசாத்திடப்படும். மேலும் கூட்டணி தொடர்பான யாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 

Facebook Comments