கேர்ணல் ரத்னப்பிரியவை மீண்டும் விஸ்வமடுவுக்கே!

கேர்ணல் ரத்னப்பிரியவை மீண்டும் விஸ்வமடுவுக்கே நியமிக்க வேண்டும்
ஜனாதிபதிக்கு விமல் அவசர கடிதம்.

விஸ்வமடு சிவில் பாதுகாப்பு முகாம் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட கேர்ணல் ரத்னப்பிரிய பந்துவை மீண்டும் அதே பதவிக்கு நியமிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணி ஜனாதிபதியை கோரியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விமல் வீரவங்ச எம்.பி, கேர்ணல் ரத்னப்பிரிய சிறந்த முன்மாதிரியாக செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தத்தின் பின்னர் உண்மையான நல்லணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டோம். ஐ.நா உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்ததே இதற்கு காரணமாக அமைந்தது.

அதிலிருந்து நல்லிணக்கம் என்ற பெயரில் மக்களை தூரமாக்கும் நடவடிக்கையே இடம்பெற்றது.

இந்த நிலையில் கேர்ணல் ரத்னப்பிரிய பந்து எனும் விசேட நபர் புலிகளுக்கு புனர்வாழ்வு வழங்குகையில் உயர் மனிதப் பண்புகளை வெளிப்படுத்தி அப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றியிருந்தார்.

அவருக்கு மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை வழங்கியிருந்தார்கள்.

இது சிங்கள ,தமிழ் முஸ்லிம் அனைவருக்கும் நல்ல பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

இந்த முன்மாதிரியை தொடர நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஷ்வமடு மக்களின் கோரிக்கை படி அவரை முன்பிருந்த பொறுப்பிற்கு நியமிக்குமாறு கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments