கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது.

கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை  போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் சாடுகின்றார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி கண்ணன் ஆலயத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனால் விசேட வழிபாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வழிபாட்டின் பின்னர் மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் நடைபெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவினர். இதன்போது பதிலளிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை இல்லாத ஆதரவினையே வழங்கி வருகின்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் அடிமைகள். அவர்கள் தொடர்ந்தும் நிபந்தனையற்ற ஆதரவினையே வழங்குகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது. ஆரம்பத்தில் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என பல்வேறு கருத்துக்களை கூறியவர்கள், நாடாளுமன்றில் எவ்வித நிபந்தனையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர்.

காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எமது அபிலாலைகளை விட்டுவிட்டு காணக்காளர் நியமனத்தில் நிற்கின்றனர். எமது அபிலாசைகள் இல்லாது போய்விட்டது. இப்போது இஸ்லாமிய மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு ரணில் விக்கரமசிங்க அந்த நியமனம் உங்களிற்குதான் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இவ்வாறுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் நலன் சார்ந்து செயற்படாது தமது நன்மைகளிற்கானதும், தமது நலன்களிற்காகவும் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

எஞ்சி இருக்கின்ற காலத்திலாவது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றகூடியவாறு அவர்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், தேர்தல் நெருங்குகின்றபோது மாத்திரம் மக்கள் நலன்சார்ந்து செயற்படுவது போன்று காட்டி மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறித்த சந்திப்பின்போது, தமது அபிலாசைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் முதியவர் ஒருவர் ஆதங்கத்தை தெரிவித்தார்.

தமது பிரச்சினைகளை தீர்க்ககூடிய வகையில் செயற்பட வேண்டும் எனவும், எமது அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.

நாடற்ற அநாதிகளாக நிற்கின்றோம். அனைத்தையும் இழந்துவிட்டோம். எமக்கில்லை என்றாலும் எமது பிள்ளைகளிற்காக நல்லதொரு தீர்வை பெற்று தாருங்கள் என அவர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Facebook Comments