குளியாப்பிட்டி துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!

குளியாப்பிட்டி துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி!

குளியாப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி – எபலதெனிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 . 10 மணியளவில் வேனில் வந்த சிலரால் மோட்டர் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்றவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிசகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொமுகொமுவ – எபலதெணிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமன் சந்தன எனப்படும் பெலெக் சமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Facebook Comments