குண்டுவெடிப்பின் பின் இலங்கைக்கு வரும் பங்களாதேஷ் அணி!

குண்டுவெடிப்பின் பின் இலங்கைக்கு வரும் பங்களாதேஷ் அணி!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் அணியாக பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்கவுள்ளதாக (திங்கட்கிழமை) பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்க்கு பங்களாதேஷ் அணி மறுத்தது. இருப்பினும், இலங்கை கிரிக்கெட் சபை அவர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் அணி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றது.

Facebook Comments