கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரி முதல்வர் சவிரி பூலோகராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இங்கு உரையாற்றும்போது,
முல்லைத்தீவில் நீராவிப்பிட்டி பிள்ளையார் மற்றும் திருகோணமலை வென்னீர் ஊற்று விவகாரங்களில் அமைச்சர் பார்க்க வேண்டும், குறித்த விடயம் தொடர்பில் பேசவேண்டும், அவ்வாறான செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர் கூறிய இரண்டும் இந்துக்களிற்கும் வேற்று இனத்தவர், வேற்று மதத்தவர்களிற்கும் இடையிலான பிரச்சினை. அவர் மன்னாரில் இடம்பெற்ற பிரச்சினையை குறிப்பிடவில்லை.

அங்கு இடம்பெறும் பிரச்சினை தமிழ் மக்களிற்கிடையிலேயே காணப்படும் கத்தோலிக்க, இந்து இளைஞர்களிற் கிடையிலான பிரச்சினை. குறித்த பிரச்சினை எமக்குள்ளேயே காணப்படும் பிரச்சினை. இந்த பிரச்சினையை முதலில் தீர்த்து வைக்காது மற்றைய இரு பிரச்சினைகளையும் தீர்க்க முற்படும் போது எம்மை நகைப்பார்கள் என தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்கட்சியாக செயற்படுகின்றனர். நான் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு எதிர்கட்சி போன்று செயற்படுகின்றேன். கடந்த காலங்களில் மனச்சாட்சிக்கு விரோதமாக அரசுக்கு ஆதரவு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது. அந்த ஆதரவு வழங்கப்படவிட்டால் இதைவிட பெரிய பிசாசு வந்து குந்திவிடும்.

அதற்காக மனச்சாட்சிக்கு விரோதமாக நாம் அரசை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ரணில் மைத்திரி பிசாசு எனில் மகிந்த கொல்லிப்பேய் பிசாசு எனவும் அவர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவில் நீராவிபிள்ளையார், திருகோணமலையில் வென்னீரூற்று பகுதிகளில் பௌத்த விகாரைகள் வைக்கப்படுகின்றன. யாழில் மிக பிரமாண்டமான முறையில் பௌத்த விகாரை திறந்து வைக்கப்படுகின்றது, கௌதம புத்தர் இந்து மதத்தில் ஏற்பட்ட அதிர்ப்பிகளை கண்டு பௌத்த மதத்தை தோற்றுவித்தார்.

நாம் தென்னிலங்கையில் பௌத்த விகாரைகள் எங்கு வைக்கப்பட்டாலும் அது தொடர்பில் கதைப்பதில்லை. ஆனால் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் பௌத்த விகாரைகள் வைப்பது தொடர்பில் பேச வேண்டி உள்ளது.

இவ்வாறு தமிழர் பகுதிகளில் குறிப்பாக முல்லைத்தீவு, திருகோணமலை பகுதியில் வைக்கப்படும் புத்த சிலைகள் அமைக்கும் பணிகளை அமைச்சர் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Facebook Comments