கிளிநொச்சி பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம். மதுவரித் திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதம்

இன்று காலை(14) கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார்.கெப்பரிக்கொலாவ மதுவரித்திணைக்களத்தின் வாடகை வாகனம் சேதமடைந்துள்ளது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி பாரிய போதைப்பொருள் கடத்தல் இடம்பெறவுள்ளதாக மதுவரித்திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரும் உத்தியோகத்தர் ஒருவரும் வாடகைக்கு வாகனம் ஒன்றில் தேடுதலை மேற்கொள்ள தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபருடன் அறிவியல்நகர் காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சி பொலீஸாருக்கும் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே பொலீஸ் அணியொன்றும் குறித்த பகுதிக்குள் தேடுதல் மேற்கொள்ள சென்றுள்ளனர்.மதுவரித்திணைக்களம் மற்றும் பொலீஸார் ஆகியஇரண்டு தரப்பினனர்களுக்கும் இடையே தொடர்பாடலற்ற நிலையில் சிவில் உடையில் சென்ற பொலீஸார் வாடகை வாகனத்தில் வந்த மதுவரித்திணைக்கள த்தின் வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போது அவர்கள்வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளனர்.இந்த நிலையிலேயே வாகனத்தின் மீது பொலீஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தகவல் வழங்கிய மன்னாரைச் சேர்ந்த நபரே காயமடைள்ளார.

கெப்பரிகொலாவ பிரதேசத்தை சேர்ந்த மதுவரித்திணைக்களத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரே கிளிநொச்சிக்கு பயணித்து பெருமளவு பணத்துடன் போதைப்பொருளை கொள்வனவு செய்பவர்கள் போன்று சென்று காத்திருந்த போதே சிவில் உடையில் சென்ற பொலீஸார் வாகனத்தை நிறுத் த முற்பட்டுள்ளனர்.இதன் போதே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் அந்த வாகணத்தில் பயணித்த 38 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவர் காயமடைந்துள்ளார்.அவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்Facebook Comments