கிளிநொச்சியில் தமிழீழ மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள். (படங்கள்)

தமிழீழ மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கனகபுரம் , முழங்காவில் தேராவில் ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர்களின் பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள் போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனா்.

அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிரதான பொதுச் சுடரை ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும் கலந்துகொண்டுவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.

சுமாா் ஜயாயிரம் வரையான பொது மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.

கடந்த வருடத்தை விட இவ்வருடம் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments