கிளிநொச்சியில் குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை!

கிளிநொச்சி குளத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புக்கருகில் அச்சுறுத்திய முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்த குறித்த முதலை, வீட்டில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்ட கோழிகளை திண்டுள்ளதுடன், குடியிருப்பாளர்களையும் அச்சுறுத்தியுள்ளது.

கிளிநொச்சி நகரில்உள்ள வீட்டுரிமையாளர்களை அச்சுறுத்திய குறித்த முதலையை நீண்ட முயற்சியின் பின்னர் பிடித்து கட்டியுள்ளதாக குடியிருப்பாளர் தெரிவிக்கின்றார்.

தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் சம்பவம் தொடர்பில் அறிவித்ததை அடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முதலையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக குறித்த பகுதியில் முதலை சென்றுள்ளதாகவும், இவ்வாறு வெள்ளம் ஏற்படுகின்ற காலங்களில் முதலையின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதாகவும் பிரதேச வாசி தெரிவிக்கின்றார்.

Facebook Comments