கிளிநொச்சியில் இக்ப்தார் விசேட நிகழ்வு

கிளிநொச்சியில் இக்ப்தார் விசேட நிகழ்வு

கிளிநொச்சியில் இக்ப்தார் விசேட நிகழ்வு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஒத்துழைப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

மாலை 6 மணியளவில் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிஜ்சங்க ரணவன அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது,

இந்நிகழ்வில் நோன்பு நோக்கம் இஸ்லாமிய சகோதரர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் சர்வ மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கதாகும்.

Facebook Comments