கிளிநொச்சியில் அதிகாலை புகையிரதம் மோதி ஆணொருவர் பலி.

கிளிநொச்சியில் இன்று அதிகாலை புகையிரதம் மோதி ஆணொருவர் பலி.

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை விபத்து. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதே பகுதியிலேயே கடந்த 25ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இணைப்பு

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற புகையிரத்துடனான விபத்தில் ஆணொருவர் பலியாகியுள்ளார். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள புகையிரதக்கடவையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் புகையிரத பாதையில் உறங்கிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளல் தெரிய வந்துள்ளது.

எனினும் விபத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபர் தொடர்பான அடையாளம் காணக்கூடிய எவையும் கிடைத்திராத நிலையில் பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments