கிராம அலுவலர் அலுவலகம் உடைப்பு : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

கிராம அலுவலர் அலுவலகம் உடைப்பு : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

கிளிநொச்சி கண்டாவளை ஊரியான் கிராம அலுவலர் அலுவலகம் நேற்று(24) இரவு உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட KN ஊரியான் 49 கிராம அலுவலர் பிரிவு அலுவலகமே நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளது

நேற்று அலுவலக கடமைகளை முடித்து அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்ற கிராம அலுவலர் இன்று(25) காலை அலுவலக கடமைக்காக அலுவலகத்துக்கு சென்ற சமயம் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை அவதானித்து கிராம அலுவலர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Facebook Comments