கால்நடைகளை உரியமுறையில் பராமரிக்க வேண்டும்!

கால்நடைகளை உரியமுறையில் பராமரிக்க வேண்டும்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக பயிர்செய்கை கூட்டத் தீர்மானத்திற்கு அமைவாக கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை உரியமுறையில் பராமரிக்க வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை நிறைவடைவதற்கு முன்னர் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை வயல் நிலங்களில் விட்டுப் பராமரிப்பதனால் கால்நடைகளால் நெற்பயிர்ச்செய்கை அழிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலபோக ஆலோசனைக் கூட்டத்திலும், பயிர்செய்கை கூட்டத்திலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை எதிர்வரும் மாரச் மாதம் 15ஆம் திகதி வரை உரிய முறையில் கட்டிப் பராமரிக்குமாறு அறிவித்துள்ளார்.

இவ்வாறு கூட்டத் தீர்மானத்தை மீறி செயற்படும் கால்நடை உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் உதவியுடன் கமநலசேவை உத்தியோகத்தர்கள், இதனை நடைமுறைப்படுத்துமாறும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments