காதலில் கவனம் செலுத்த நேரமில்லை!

காதலில் கவனம் செலுத்த நேரமில்லை!

கல்லூரியில் படிக்கும்போது எனக்கு காதல் வந்தது. ஆனால் கவனம் செலுத்த நேரமில்லை என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

நடிகை ஓவியா தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து செவ்வி வழங்கியுள்ளார். குறித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

கதாநாயகிகளுக்கு இடையே போட்டி இருப்பது உண்மைதான். போட்டியில்லாத துறையே கிடையாது.

சினிமாவில் எனக்கு போட்டி என்று நான் யாரையும் நினைக்கவில்லை. யார்-யார் எத்தனை படங்களில் நடிக்கிறார்கள் என்று நான் விசாரிப்பதில்லை. யாருக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை.

எனக்கு யாரும் எதிரிகளாக இல்லை. நானும் யாருக்கும் எதிரியாக இல்லை. அப்படி எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக்கொள்வதால் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Facebook Comments