கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்.

dav

கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்.

2009 ஆண்டு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கரைச்சி பிரதேச சபையின் மாதாந்த சபையமர்வில் கரைச்சி பிரதேச  சபையின்  தவிசாளர்  அ.வேழமாலிகிதன் அவர்களின் தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது.

அனைத்து உறுப்பினர்களாலும் நெய் விளக்கு, மெழுகுதிரி ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் சிங்கள பேரினவாதிகளினால் கொல்லப்பட்ட எமது மக்களின் ஆத்மா சாந்தியடைய இன்று பிராத்திக்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொள்ளுவதற்காக தாயகம் தயாராகி வருகின்ற நிலையில் அந்த வாரத்துக்குள் சபை அமர்விலே கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களால் ஒழுங்கு செய்த இந்த நிகழ்வில் கலந்து ஆத்மா சாந்தி அடைய பிராத்தித்தனர் .

dig
dav
dav
dav
dav
Facebook Comments