கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களிற்காகவும், பாதிக்கப்பட்டவர்களிற்காகவும் விசேட தொழுகை

கடந்த 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களிற்காகவும், பாதிக்கப்பட்டவர்களிற்காகவும் இன்று கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் விசேட தொழுகை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த தொழுகை இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பள்ளியில் இடம்பெற்ற குறித்த விசேட தொழுகைக்கு கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிபிரிய, 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் ஏ.எஸ்.கேவவிதாரண உள்ளிட்ட படை உயர் அதிகாரிகள், இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அண்மையில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்காகவும், பாதிக்கப்பட்ட சகல மக்களிற்காகவும், சமாதானம் வேண்டியும் விசேட தொழுகை இடம்பெற்றது.

தொடர்ந்து கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, இஸ்லாமிய மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டியதில்லை எனவும், எவ்வாறானதொரு பாதிப்பு, சந்தேக நபர்கள் தொடர்பிலும் அருகில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்குமாறும் பணித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்து, கிறிஸ்தவ மத தலைவர்களுடன் நாம் பேசியுள்ளோம்.

அதேபோன்று உங்களுடனும் இன்று பேசுகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை.

நீங்கள் சுதந்திரமாக வாழ முடியும்.

இங்கு உள்ளவர்களை பாதுகாக்கவே நாம் இருக்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இங்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

ஆனாலும், புதியவர்கள், சந்தேகத்திற்கிடமானவர்கள் யாராவது இருந்தல் படையினருக்கு தகவல் வழங்குங்கள் எனவும் அவர் இதன்போது பணித்தார்.

Facebook Comments