ஒரே அறையில் தங்கிய காதல் ஜோடி! – காதலி மரணம்!

ஒரே அறையில் தங்கிய காதல் ஜோடி! – காதலி மரணம்!

சென்னை சேப்பாக்கத்தில் தங்கிய காதல் ஜோடி, சைனைடு சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

இதில் காதலி இறந்துவிட, காதலன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

சென்னை சேப்பாக்கம் மியான் சாஹிப் தெருவில் உள்ள விடுதியில், காதல் ஜோடி அறை எடுத்துத் தங்கியது.

அந்த அறை இன்று காலை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், விடுதியின் மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து கதவை தட்டிப்பார்த்தார். ஆனால், எந்தவித பதிலும் இல்லை.

இதையடுத்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மேலாளர் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீஸார் விடுதிக்குச் சென்றனர்.

அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், காதல் ஜோடி மயங்கிய நிலையில் படுக்கையில் படுத்திருந்தனர்.

இதையடுத்து, அவர்களை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள், காதலி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Facebook Comments